இதுதான் ‘காலா’ கதை… – கசிய விட்ட அமெரிக்க தியேட்டர்!

Get real time updates directly on you device, subscribe now.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ‘காலா’.

இப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சுவிட்சர்லாந்து, நார்வே உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அங்குள்ள சினிமா ரசிகர்கள் காலா எப்படிப்பட்ட படம் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ள நிலையில் அமெரிக்காவில் காலா ரிலீசாகும் தியேட்டர்களில் ஒன்றான சினிமார்க் என்ற தியேட்டர் காலா திரைப்படத்தின் கதையை தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் கசிய விட்டிருக்கிறது.

Related Posts
1 of 77

கதைப்படி, ‘குழந்தையாக திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு செல்லும் சிறுவன், அங்குள்ள தாராவி பகுதியில் டான் ஆகிறார். அப்பகுதி மக்களுக்காக போராடுகிறார். இப்படத்தைப் பார்க்க வாருங்கள்’ என்று கதைச்சுருக்கத்தை வெளியிட்டிருக்கிறது.

ஏற்கனவே இந்தக் கதை என் அப்பாவின் கதை, அவரை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது என்று திருநெல்வேலி ஆவரைக்குளத்தைச் சேர்ந்த திரவியம் நாடாரின் மகன் ஜவஹர் நாடார் 101 கோடி ரூபாய் இழப்பீடாகக் கேட்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு கதைச்சுருக்கம் வெளியாகியிருப்பது காலா படக்குழுவினருக்கு இன்னொரு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.