கவர்ச்சியை நம்பி களமிறங்கும் நடிகைகளுக்கு மத்தியில் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’ என நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடித்து பெயரெடுத்தவர் நடிகை அஞ்சலி.
இடையில் தனது சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆந்திராவுக்கு எஸ்கேப் ஆனவர் அங்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததால் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
ஜெயம் ரவியுடன் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டியும் அப்படி அவர் நடித்த படங்கள் பெரிய அளவுக்கு போகவில்லை.
இதனால் தன் மீது இருந்த நல்ல நடிகை என்கிற இமேஜ் டேமேஜ் ஆனது தான் மிச்சம் என்று யோசித்தவர் இப்போது கவர்ச்சிக்கு குட்பை சொல்லி விட்டு மீண்டும் நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடிப்பது என முடிவெடுத்திருப்பவர் ‘அங்காடித் தெரு’ மாதிரி ஒரு நல்ல கதையோடு வாங்க என்று இயக்குநர்களிடம் கோரிக்கை வைக்கிறாராம்.
எல்லாத்துக்கும் ஒரு அனுபவம் தேவைப்படுது!