ஹன்ஷிகாவுடன் படப்பிடிப்புக்கு அவருடைய அம்மா தான் வருவார்.
அடிப்படையில் அவர் ஒரு டாக்டர் என்பதால் படப்பிடிப்பில் இருப்பவர்களுக்கு உடல் நலம் சம்பந்தமான டிப்ஸ்களை கொடுப்பது, அது குறித்து பேசுவது என்று பொழுதைப் போக்குவார்.
என்னதான் படப்பிடிப்பில் அப்படி இருந்தாலும், மகளின் நடவடிக்கைகளையும் வைத்த கண் வாங்காமல் பார்ப்பதிலும் கெட்டிக்காரர். அப்படித்தான் சிம்புவுடனான காதலை நேக்காக நோட்டமிட்டு அவரிடமிருந்து மகளை பிரித்து கொண்டு வந்தார்.
அதன்பிறகு ஹன்ஷிகா அரை டஜன் படங்களுக்கும் மேல் சமத்து பிள்ளையாக படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டாலும் சமீபகாலமாக அவருக்கும் அவருடைய அம்மாவுக்கும் மோதல் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.
சம்பளம் வாங்குவதிலும், அதில் பங்கு பிரிப்பதிலும் அம்மாவுக்கும், மகளுக்கும் இடையே வந்த மோதல் இப்போது புதிதாக மேனேஜர் ஒருவரிடம் தஞ்சமாகிற அளவுக்கு முற்றிப் போயிருக்கிறது.
புதிதாக வந்திருக்கும் அந்த மேனேஜரிடம் தான் கால்ஷீட் பார்ப்பது, சம்பளம் வாங்குவது, அது குறித்தான கணக்கு வழக்குகளையும் பார்ப்பது என எல்லா விவகாரங்களையும் பார்க்கச் சொல்லியிருக்கிறாராம் ஹன்ஷிகா.
எத்தனை நாளைக்கு போகும் இந்த அம்மா – பொண்ணு சண்டை?
வெயிட் பண்ணிப் பார்ப்போம்…