படப்பிடிப்புக்கும் வரல… புரமோஷனுக்கும் வரல… : சர்ச்சையில் சிக்கினார் நயன்தாரா!

மிட்டாகும் தமிழ்ப்படங்களின் படப்பிடிப்புக்கு போவதோடு சரி, அதைத் தவிர்த்து அந்தப் படத்தின் எந்த வித புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை நயன்தாரா.

இருந்தாலும் அவர் நடிக்கின்ற படங்கள் செண்டிமெண்ட்டாக ஹிட்டாவதால் அவரை தங்கள் படங்களில் நாயகியாக்குவதை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போடுகிறார்கள்.

ஆனால் தெலுங்கு சினிமாவில் அப்படி இல்லை. படத்தில் நடிக்கும் நாயகி கண்டிப்பாக அந்தப்படத்தின் புரமோஷனுக்கும் வர வேண்டும் என்கிற கட்டாயம் உண்டு.

இந்த விதிமுறையை சமீபகாலமாக அங்கும் அதிகமாக மீற ஆரம்பித்திருக்கிறார் நயன்தாரா.

வெங்கடேஷ் ஜோடியாக மூன்றாவது முறையாக ‘பாபு பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த அப்படத்தின் ஆடியோ நிகழ்ச்சிக்கு  அழைப்பு விடுக்கப்பட்டும் இறுதிவரை நிகழ்ச்சிக்கு வராமலே டிமிக்கி கொடுத்து விட்டார் நயன்தாரா.

புரமோஷனுக்கு வரவில்லை என்றால் சமாளித்து விடலாம்; ஆனால் நயன்தாரா படப்பிடிப்புக்கே வருவதில்லை என்பது தான் அப்படத்தின் இயக்குநர் மாருதி கூறும் கடுமையான குற்றச்சாட்டு.

நயனின் இந்த கால்ஷீட் சொதப்பலாம் சென்ற ஏப்ரல் மாதம் ஸம்மருக்கு ரிலீசாகியிருக்க வேண்டிய ‘பாபு பங்காரம்’ வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

நயன்தாராவின் இந்த நடவடிக்கை தொடர வாய்ப்பிருக்கும் என்பதால் மீண்டும் இதே குழுவுடன்  வெங்கடேஷ் – நயன்தாரா கூட்டணியில் ஒரு ரொமான்ஸ் படமொன்றை எடுக்க திட்டமிட்ட படத்தின் தயாரிப்பாளர் அந்த திட்டத்தை கை விட்டு விட்டாராம்.

Babu BangaramNayanatharaVenkatesh
Comments (0)
Add Comment