பகத் பாசில் க்ரீன் சிக்னல் : மீண்டும் நடிக்க வந்தார் நஸ்ரியா!

மிழில் ‘நேரம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா.

தொடர்ந்து ‘ராஜா ராணி’, ‘நையாண்டி’, ‘திருமணம் என்னும் நிஹ்ஹா’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.

இதில் நையாண்டி படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த போது அப்படத்தின் இயக்குநர் சற்குணத்துடன் ஏற்பட்ட மோதலையடுத்து தமிழ்சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு மலையாளப் படங்களில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார்.

அங்கேயும் நடிக்க ஆரம்பித்த ஒன்றிரெண்டு படங்களுக்குள்ளாகவே பிரபல நடிகர் ஃபகத் பாஸிலுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டே விலகிச் சென்றார்.

திருமணத்துக்குப் பிறகு நடிக்க ஆசைப்பட்டாலும் ஃபகத் பாசில் குடும்பத்தினர் நஸ்ரியாவுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அதனால திரையில் முகம் காட்டாமல் இருந்த நஸ்ரியா தற்போது மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் திரைப்படங்களில் தலை காட்ட முடிவு செய்திருக்கிறார்.

அவருடைய அந்த நடிப்பாசையை அணை போட்டு தடுக்காமல் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார் அவரது கணவரும் நடிகருமான ஃபகத் பாசில்.

அந்த வகையில் திருமணத்துக்குப் பிறகு நடிக்கப் போகும் முதல் படமாக ‘பெங்களூர் டேஸ்’ படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கத்தில் ப்ரிதிவிராஜ் நாயகனாக நடிக்கும் புதுப்படம் ஒன்றில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் நஸ்ரியா.

இதில் இன்னொரு நாயகியாக பார்வதி நடிக்கவுள்ளார். நவம்பர் 1-ம் தேதி முதல் ஊட்டியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஊட்டியைத் தொடர்ந்து கேரளா, துபாய் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Actress Nazriyaanjali menonFahad FazilMovie Newsparvathy menon
Comments (0)
Add Comment