இன்றைய சூழலில் எப்படி நயன்தாராவையும் – விக்னேஷ்சிவனையும் பிரிக்க முடியாதோ? அப்படித்தான் சர்ச்சையையும் – நயன்தாராவையும் எப்போதுமே பிரிக்க முடிவதில்லை.
தான் கமிட்டாகிற படங்களின் படப்பிடிப்புக்கு எந்த பிரச்சனையும் செய்யாமல் போய் விடும் நயன்தாரா அந்தப் படங்களுக்காக தங்குகிற ஹோட்டல்களில் மட்டும் தவறாமல் பஞ்சாயத்து வைத்து விடுகிறார்.
அவரது அழிச்சாட்டியத்தை பொறுத்து பொறுத்துப் பார்த்த ஸ்டால் ஹோட்டல் முதலாளிகள் இனிமேலும் அமைதியாக இருந்தால் சரியாக இருக்காது என்று ஒன்று கூடி பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஆமாம், இனி நயன்தாராவுக்கு ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் கிடையாது என்பது தான் அந்த அதிரடி முடிவு.
இந்த முடிவை எடுத்திருப்பவர்கள் ஆந்திர ஹோட்டல் முதலாளிகள். சரி இப்படி விரக்தி அடைகிற அளவுக்கு நயன்தாரா ஹோட்டலில் என்ன செய்கிறார்?
ஹோட்டலில் தங்கும் நயன்தாரா அங்கு சாப்பிட்டோமோ, ஓய்வெடுத்தோமோ என்பதோடு இருக்காமல் அங்கு வேலை செய்யும் ஊழியர்களிடம் விடாமல் தகராறு செய்வதும், ரூமில் இருக்கின்ற பொருட்களை உடைத்து தள்ளுவதுமாக அட்டகாசம் செய்கிறாராம்.
உடைகிற பொருட்களுக்கு அவரும் பணம் தருவதில்லை. அவர் நடிக்கிற படம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடமிருந்தும் இழப்பீடு வாங்க முடிவதில்லை.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் ஆந்திராவிலுள்ள ஸ்டார் ஹோட்டல் முதலாளிகள் நயன்தாராவுக்கு ரூம் கொடுப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.
அவர்களின் இந்த அதிரடி முடிவைக் கேள்விப்பட்டு நயன்தாராவை வைத்து படமெடுக்க நினைத்த சில தயாரிப்பாளர்கள் மேற்படி ஹோட்டல் முதலாளிகளுடன் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
என்னம்மா நயன் இப்படி பண்றீங்களேம்மா..?