படத்தின் தலைப்பே இந்தப் படம் 2K கிட்ஸுக்கானது என்பதைச் சொல்லிவிடுகிறது
கதைப்படி நாயகன் ராஜு பெண்களிடம் பேசத்தயங்கும் கேரக்டர். கல்லூரிக்குள் நுழைந்ததும் பேசிய முதல் பெண்ணிடமே பாஸ்மார்க் வாங்குகிறார். அந்த முதல் பெண் ஹீரோயின் பவ்யா. இருவரும் காதலர்கள் ஆகிறார்கள். இந்தக் காதலுக்குள் மூன்றாவதாக மைக்கேல் நுழைகிறார். மேலும் இன்னொரு ஹீரோயின் ஆதியா விஜே பப்புவை காதலிக்கிறார். அந்தக் காதலுக்குள்ளும் ஒரு சிக்கல். இரு காதல் ஜோடிகளின் முடிவை நோக்கி மீதிப்படம் செல்கிறது
ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திலே முத்திரைப் பதித்துள்ளார் ராஜு ஜெயமோகன். பவ்யா ஆதியா இரு நாயகிகளும் கதைக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர். காமெடி காட்சிகளுக்கு உத்திரவாதம் அளிக்கிறார்கள் சரண்யாவும் தேவதர்ஷினியும். விஜே பப்புவிற்கு இப்படம் நல்ல கம்பேக். கேமியோவில் வரும் விக்ராந்த் ஸ்வீட்! சார்லி வழக்கம் போல தனது ஆளுமையைப் பதிவு செய்துள்ளார்
படத்தின் மெயின் ஹீரோவாக நிவாஸ்.கே பிரசன்னாவைச் சொல்லலாம். பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே துள்ளல் ரகம். ஒளிப்பதிவாளர் பாபுகுமார் ப்ரேமிங் கலரிங் இரண்டிலும் அசத்தியுள்ளார்
40+ ஆடியன்ஸுக்கு இப்படத்தின் கதை ஒவ்வாமை தரக்கூடும். ஆனால் இனி காலம் இப்படியான காதல்களைச் சந்திக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. முதல் பாதியில் சற்று பொறுமையைச் சோதிக்கும் படம், இரண்டாம் பாதியில் சிறப்பாக பயணிக்கிறது. படமெங்கும் வரும் நகைச்சுவை காட்சிகள் பெரிய ஆறுதல். சில உறுத்தல்கள் இருந்தாலும் 2K கிட்ஸுக்குப் பொருத்தமான படம் இது
3/5