ஒரு வானவில் என்றாலே அழகு. கோடி வானவில் என்றால் எவ்வளவு அழகாக இருந்திருக்க வேண்டும்? But…
ஒரு ஷோ நடத்தும் ஐடியாவை நாயகி சித்தி இத்னானியை வைத்துப் பிடிக்கிறார் ஹீரோ ஹரிஷ் கல்யாண். அந்த நிகழ்ச்சிக்கு சித்தி இத்னானியையே ஆங்கராக்க கேட்கிறார். ஆனால் சித்தி இத்னானி மறுக்கிறார். காரணம் அவரது காதலனுக்கு இந்த மாதிரியான விசயங்கள் பிடிக்காது. அதேநேரம் கோமாவில் சிகிச்சையில் இருக்கும் அந்தக் காதலனுக்கு செலவு செய்ய பணம் வேண்டும். இந்த ஆங்கர் வேலையின் மதிப்பையும் தேவையையும் ஹரிஷ் கல்யாண் சொல்ல, சித்தி இத்னானி ஒரு கட்டத்தில் இணங்குகிறார். அந்த இணக்கம் அவர்களை வேறு கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஆல்ரெடி ஒரு காதலில் இருக்கும் சித்தி இத்னானி என்ன முடிவு எடுக்கிறார் என்பது படத்தின் கதை
தனது வேலை முக்கியம் என பயணிக்கும் இடங்களிலும் சித்தி இத்னானியை மோட்டிவேட் செய்து அழைத்துச் செல்லும் காட்சிகளிலும் கவர்கிறார் ஹரிஷ் கல்யாண். சித்தி இத்னானி திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரிச்சி கேரக்டர், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா, விஜே பார்வதி உள்ளிட்ட இதர நடிகர்களும் ஸ்கோர் செய்கிறார்கள்
ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமாரின் கேமாரா கோவாவின் அழகை மொத்தமாக அள்ளியிருக்கிறது. சித்துக்குமார் இசையில் பாடல்கள் வசீகரிக்கின்றன. பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கிறது
கதையில் சின்னதான எதிர்பார்ப்பை வைத்த இயக்குநர் சசி திரைக்கதையில் அதை தக்க வைக்கவில்லை. தட்டையான எமோஷ்னலும் மைனஸ்! சசி படங்களிலே பெரிதாக கவராத படமென்றால் அது இதுதான்.
நூறுகோடி வானவில்- ஒரு ஜோடியின் உணர்வைக் கூட சரியாக கன்வே செய்யவில்லை
2.5/5