சுந்தர் சி குத்திவிட்ட மூக்குத்தி நம் காதில் எக்குத்தப்பாக சொறுகி விட்டது
கதைக்கு வருவோம். நயன்தாராவின் தூக்கத்தை தொலைக்க வைக்கிறது ஒரு கனவு. கனவில் பலகுரல்கள் இவரை மயிலாஞ்சிக்கு வா வா என அலைக்கின்றன. மயிலாப்பூரை அறிந்த நயனுக்கு மயிலாஞ்சி தெரியவில்லை. அவர் மயிலாஞ்சியை கண்டுபிடித்து செல்வதற்குள் மீதிக்கதையை ஒருவாறு உருட்டி பெரட்டியுள்ளார் சுந்தர் சி. நயன் மயிலாஞ்சி வந்தபின் ரெஜினா கஜண்ட்ரா பூமிக்கடியிலிருந்து உயிர்த்தெழுகிறார். அதன்பின் நயன் என்ற மூக்குத்தி அம்மனுக்கும் ரெஜினா என்ற அரக்ககுல தலைவிக்கும் சண்டை! பலவிதமாக உடையுது ரசிகனின் மண்டை
நடிப்பில் குறை வைக்காத நயன் தாரா இதில் நிறைய குறை வைத்துள்ளார். எந்த எமோஷனலும் அவர் நடிப்பில் எடுபடவில்லை. கெஸ்டாக வரும் இரு அம்மன்கள் கூட பெஸ்ட்-ஐ தரவில்லை. யோகிபாபு காமெடியும் ம்ஹும்! ரெஜினா வில்லித்தனம் கூட சல்லித்தனமாகத் தான் தெரிகிறது
ஒளிப்பதிவாளர் இரவுக்காட்சிகளையும் பகலிலும்,பகல் காட்சிகளிலும் எடுத்து நம்மை ஏகத்திற்கும் கன்பியூஸ் செய்கிறார். ஹிப்ஹாப் ஆதி நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி என்ற லெவலில் நம் காதுகளை பதம் பார்க்கிறார்
சுந்தர் சி சிக்னேச்சர் என படத்தில் எதுவுமே இல்லை. இது ஆகப்பெரும் சோகம். காமெடி காட்சிகள் கண்ணில் படவே இல்லை. அய்யகோ சுந்தர் சி படம்தானா இது?
அரதப்பழசான கதைக்கு அதைவிட அரதபழசான திரைக்கதையை எழுதியுள்ளார் சுந்தர் சி. Sorry sir
2/5