வெற்றிக்கோல்டா? வெற்றுக்கோடா?
நடிகர் வெற்றிக்கென்றே சில கேட்டகிரி படங்கள் உண்டு. அதே வரிசையில் தான் இந்தப்படமும் உள்ளது. முடி பிஸ்னெஸில் கொடிகட்டிப்பறக்கும் ஏ.வெங்கடேஷிடம் டிரைவராக இருக்கிறார் ஹீரோ வெற்றியின் அப்பாவான லிவிங்ஸ்டன். அவருக்கு ஓர் பிரச்சனை வருகிறது. அதற்கான காரணம் யார் என்பதை வெற்றி கண்டுபிடித்து பழி வாங்குகிறார் அதுதான் மெயின் கதை. கிளைக்கதையாக இரண்டு லேயர்கள் உண்டு. அது தனிக்கதை!
வழக்கம் போல எல்லா எமோஷன்களுக்கும் ஒரே ரியாக்சன்ஸ் கொடுத்து நம்மை டயர்ட் ஆக்குகிறார் வெற்றி. பிரியாலயா நல்ல நடிகை என்பதை சில படங்களில் நிரூபித்துள்ளார். ஆனாலும் அவருக்குச் சரியான வாய்ப்பு அமையவில்லை. லிவிங்ஸ்டன், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் ஒகே ரகம்
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பின்னணி இசையில் செலுத்திய கவனத்தை பாடல்களில் செலுத்தவில்லை. அதுவொரு மைனஸ். ஒளிப்பதிவாளர் சந்தோஷ்குமார் வீராசாமி சில ஷாட்களை இன்னும் கவனத்துடன் எடுத்திருக்கலாம். ஒருசில விஷுவல்ஸ் ஒகே. எடிட்டர் படு சொதப்பல்
கதையாக கவனம் ஈர்க்க வைத்த இயக்குநர் தீரன் அருண்குமார் காட்சியமைப்பிலும் திரைக்கதையிலும் கோட்டைவிட்டுள்ளார். முடி தொழிலுக்குள் இருக்கும் கிரைமை இன்னுமே வீரியமாக காட்டியிருக்கலாம். ஹீரோவிற்கான Need-ஐ கதையில் இன்னும் ஸ்ட்ராங் செய்திருக்கவேண்டும். ஓகோ என வந்திருக்க வேண்டிய படம்..ஒகேவாக வந்துள்ளது
2.5/5