I am game- விமர்சனம்

 

துல்கர் சல்மானின் தொடர் வெற்றிக்கு இந்த கேம் தடையா?

ஐ.பி.எல் கிரிக்கெட்-ஐ வைத்து நடக்கும் பெட்டிங் கிரைம் உலகப்புகழ் பெற்றது. அதை அடிப்படையாக வைத்து இந்தப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர். பெரிய கேம் வெறியரான துல்கர் சல்மான் சூதாட்டத்தில் நிறைய இழக்கிறார். குறிப்பாக தனது வலது கை உள்பட! அவருக்கு ஒரு மாற்றுக்கை பொருத்தப்படுகிறது. அந்தக் கை அவரது வாழ்வில் நிறைய விசயங்களை மாற்றுகிறது. அவை என்னென்ன? அதற்கான பின்னணி என்ன என்பது படத்தின் கதை

துல்கர் சல்மான் நடிகராக படத்திற்குப் படம் மெருகேறிக்கொண்டே இருக்கிறார். அவரின் மேஜிக் இந்தப்படத்திலும் வொர்க் ஆகியுள்ளது. கயாடுலோஹர் தனது இயல்பான நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்கிறார். இடைவேளைக்குப் பிறகு சம்யுக்தா அசத்தியுள்ளார். ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின் இருவரும் சரியான மீட்டரில் நடித்துள்ளனர். கதிருக்கு பெரியளவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை

ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித் இந்தப்படத்தின் முக்கியமான தூண்! எல்லாப் பிரேமும் பிரம்மாண்டம். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே படத்தை என்கேஜ் செய்கிறது. சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர் மூவரும் திரைக்கதை எழுதியுள்ளனர். ப்ளாஸ்பேக்கில் மட்டும் எழுத்தில் ஷார்ப் செய்திருக்கலாம்

இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் மேக்கிங்கில் மிரட்டியுள்ளார். படத்தில் ஹீரோவுக்கான எமோஷ்னல் பாயிண்ட் வீக்காக அமைந்துள்ளது. படத்தின் நீளமும் பெரிய மைனஸ்! அதனால் இது
ஒன்டைம் ஆடக்கூடிய கேம்
3/5

Actor Dulquer SalmaanI am game movie