தனுஷ் சமைத்த இட்லிக்கு ருசி இருக்குதா?
நடிகர் தனுஷ் இயக்கியுள்ள நான்காவது படமிது. கிரிஞ்ச் டைப் கதை என்றாலும் பேமிலி ஆடியன்ஸை வர வைக்கும் கதையாக இருக்கவேண்டும் என முனைந்துள்ளார் தனுஷ். சரி கதை?
கிராமத்தில் இட்லி செய்வதை தவம் செய்வதாக எண்ணி வாழ்கிறார் ராஜ்கிரண். மகன் தனுஷோ கிராமம் தாண்டியும் உலகம் இருக்கிறது என தன் கனவுகளை விரித்துக்கொண்டு பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பா சொன்னதே சரி என தனுஷ் ஊருக்கே ரிட்டர்ன் ஆகி இட்லிக்கடையைப் போடுகிறார். இதற்கிடையில் அவர் வாழ்வில் நடந்த மாற்றம் என்ன என்பதே கதை
இட்லிக்கு ஏற்ற சட்னியாக தனுஷின் நடிப்பு கதைக்கு ஆகப்பொருத்த்மாக உள்ளது. பக்காவாக செட்டாகியுள்ளார். அருண்விஜய் கேரக்டர் வார்ப்பும், அவர் நடிப்பும் படு செயற்கை. நித்யாமேனென் கேரக்டரிலும் அவ்வளவு தெளிவில்லை. நாயகனுக்காகவே படைக்கப்பட்ட 80s ஹீரோயின் போல படத்தில் வருகிறார். சாலினி பாண்டே வழக்கமான பெரிய இடத்துப்பெண். சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி மூவரின் கேரக்டரும் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன டெம்ப்ளேட்டுகள்.
படத்தில் மகுடம் சூடும் கலைஞர்கள் இருவர். ஒளிப்பதிவாளர் கிரண் கெளரி. மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இருவரும் தனுஷுக்கு பெருந்துணை புரிந்துள்ளனர்
ஒரு ஸ்கிரீன் ரைட்டராக தனுஷ் முதல் அரைமணி நேரம் படத்தை அட்டகாசமாக நகர்த்தியுள்ளார். அதன்பின் பழைய பானையாக படம் துருப்பிடிக்கத் துவங்கி விடுகிறது. குறிப்பாக படம் பேசியுள்ள கருத்தும் முன்னேற்றத்திற்கான வழிகளை சுருக்குவதாக உள்ளது. மாற்றம் தான் உலகில் மாறாதது. காலமுழுக்க பழமை பேசியே வாழ்வை ஓட்ட முடியாது.
சின்னச்சின்ன எமோஷ்னல்ஸ், வழக்கமான சில ஜிமிக்ஸ் மட்டும் படத்தை ஓரளவு காப்பாற்றுகின்றன
இட்லிகடை- பழைய வடை
2.5/5