லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு- விமர்சனம்

லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு என்பது அந்தக்காலத்தில் தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு. ஆனால் இந்தப்படம் அந்த நிஜ கொலை வழக்கு பற்றியது அல்ல.

ஹீரோ வெற்றி ஒரு தூக்குத்தண்டனைக் கைதி. அவரை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. கதை நடக்கும் காலகட்டம் 1970 காலகட்டம். தூக்குமேடைக்குச் செல்லும் வெற்றி அவ்வப்போது அவரின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறார். பின் காவலதிகாரி ரங்கராஜ்பாண்டியிடமும் சொல்கிறார். அவர் சொல்லும் சம்பவங்கள் காட்சிகளாக விரிகிறது. வெற்றிக்கு ஏன் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது? அவர் கொலைசெய்த லக்‌ஷ்மிகாந்தன் என்பவர் யார்? என்ற கேள்விகளுக்குப் படம் பதில் சொல்கிறது

கதையின் நாயகன் வெற்றி வெற்றி வழக்கம் போல சுமாரான நடிப்பையே கொடுத்துள்ளார். உணர்ச்சிகளை காட்சிகளிலும் அவர் நடிப்பில் உணர்ச்சியில்லை. ரங்கராஜ்பாண்டே ஒருபக்கம் ஓவர் ஆக்டிங்கால் நம்மை வெளுத்தெடுக்க, கவிதா பாரதி இதென்ன பிரமாதம் என நடிக்கிறார். இயல்பாக நடித்தவர்களில் சுப்பிரமணிய சிவா, லிஸி, பிரிகிடா ஆகியோரை மட்டும் சேர்க்கலாம். மாறனுக்கு காமெடி செய்ய காட்சிகளில்லை. அவரும் செய்யவில்லை..சரவணன் ஒகே

ஒளிப்பதிவாளர் MV பன்னீர் செல்வம் ஒரே இடத்தில் நடக்கும் பல காட்சிகளுக்கு தன்னால் முடிந்தளவு வித்தியாச விஷுவல் கொடுத்துள்ளார். இசைஞர் தர்புகா சிவா தேமே என இசைத்துள்ளார்

திரைக்கதை எனும் இடத்தையும் வசனமே எடுத்துக்கொள்ளும் படி உழைத்திருக்கிறார்கள் கவிதாபாரதியும் இயக்குநர் தயாள் பத்மநாபனும். எந்தக் கேரக்டரும் படத்தில் இயல்பாக இல்லை. அதனாலே படம் நமக்கு வொர்த்தாக இல்லை. சோ சேட்!
2/5

Actor Rangaraj pandeyActor vetriLakshmikanthan kolai vazhakku movie