ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார்.
கடும் போட்டிக்கிடையே வந்த இப்படத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றி 2019-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் வெற்றியாக அமைந்திருப்பதால் உச்சபட்ச உற்சாகத்தோடு நம்மை சந்தித்துப் பேசினார் ஜெயம் ரவி…
‘தனி ஒருவன்’ வெற்றி பெற்றபோது பத்திரிகையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டானது. ‘அடங்க மறு’ படத்தின் விமர்சனங்களை படித்த போது அது இன்னும் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது.
கதை என்ன இருந்தாலும் அதை கொடுக்கும் விதம் மிக முக்கியம், இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான அனைத்து பாராட்டுக்களும் கார்த்திக்கை தான் சாரும். இந்த படத்தின் வெற்றி மூலம் கார்த்திக் மற்றும் சுஜாதா அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ் சினிமாவில் வரவேற்கிறோம்.
நான் கதையை நம்பியதை விட கார்த்திக்கை நம்பினேன். அவர் எல்லோரிடமும் பேசி மயக்கியே வேண்டிய வேலையை வாங்கி விடுவார். இந்த மொத்த படக்குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்
சந்திப்பில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, முண்டாசுப்பட்டி ராமதாஸ், இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், கலை இயக்குனர் இளையராஜா, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய், ஆடை வடிவமைப்பாளர் கவிதா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.