சின்ன லைனைக் கொண்டு இனி சின்னவரை வைத்து படமெடுத்தால் சரியாக இருக்காது என ஒரு பெரிய லைனைப் பிடித்து கலகத்தலைவனை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி.. படம் எப்படி இருக்கு?
வஜ்ரா என்றொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ரகசியங்கள் வேறோர் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது. அதனால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆட்களை குறிவைத்து விசாரணை நடத்துகிறது வஜ்ரா. விசாரணையை மூர்க்கத்தனமாக நடத்துபவர் ஆரவ். அந்த விசாரணை வளையத்திற்குள் உதயநிதி ஸ்டாலின் எப்படி வருகிறார்? ஏன் வருகிறார்? அதன் பின் என்னென்னெ நடக்கிறது என்பதே கலகத்தலைவன் கதை
நெஞ்சுக்கு நீதி படத்திற்குப் பின் அடுத்த படமே உதயநிதியின் நடிப்பை பாராட்டும் படி அமைந்திருப்பது அவரின் கரியருக்கு ப்ளஸ். இயல்பாக நடித்துள்ளார். நிதி அகர்வால் ஆட்டிட்யூட் காட்டும் காட்சிகளில் செம்ம அழகு. எமோஷ்னல் காட்சிகளில் ஓரளவு ஓகே. வில்லனாக ஆரவ் மிரட்ட முயன்றுள்ளனர். கலையரசன் ஏற்ற கேரக்டருக்கு ஏற்றம் செய்துள்ளார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பின்னணி இசை முன்பாதியில் பெரும்சோகம். பின்பாதியில் பேராறுதல். பாடல்கள் ஓகே ரகம். ஒளிப்பதிவு படத்தின் குவாலிட்டியை உயர்த்திக் காட்டுகிறது. நைஸ் நைஸ்!
வஜ்ராவின் ரகசியங்கள் ஏன் வெளியில் கசியவிடப்படுகிறது என்கிற காரணம் ஸ்ட்ராங்காகச் சொல்லப்பட்டுள்ளது படத்தின் திரைக்கதைக்கு பலம். பின்பாதியில் பல காட்சிகள் இழுவையோ இழுவை. முன்பாதியில் இருந்த க்ரிப் பின்பாதியில் இல்லை. ஒரு நிறுவனம் மூடப்பட்டால் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாகிறது என்பதை கரிசனத்தோடு காட்டியிருக்கும் இயக்குநர், வஜ்ரா கம்பெனி மூடப்பட்டால் பலியாகும் தொழிலாளர்களைப் பற்றி ஏன் பேசவில்லை? மேலும் வஜ்ராவின் ரகசியங்கள் எப்படி கசியவிடப்படுகிறது என்பதில் டீடெய்லிங் வொர்க் போதுமான அளவில் இல்லை. இருப்பினும் ஒரு நல்ல திரில்லர் அட்டம்ப்ட் இந்தக் கலகத்தலைவன்! So one time watch என்ற கேட்டகிரியில் தலைவனைப் பார்க்கலாம்
3/5
#KalagaThalaivan