‘சண்டக்கோழி 2’ படக்குழுவுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த கீர்த்தி சுரேஷ்

ல்வேறு லொகேஷன்கள், இரவு, பகல் பாராது விடாமல் உழைக்கும் இயக்குனர், நடிகர்கள், படக்குழு என விஷாலின் ‘சண்டக்கோழி 2’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

நீளமான வசனம், நடிக்க மிகச்சிறந்த வாய்ப்பு என்று கீர்த்தி சுரேஷுக்கு இப்படம் அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 9-ம் தேதியோடு நிறைவுபெற்றது.

எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் செய்த செயல் படக்குழுவினர் 150 பேரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆம், படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்த அத்தனை பேருக்கும் தலா 1 கிராம் தங்கக் காசு வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய இந்தப் பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.

விஷால் , லிங்குசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய படமான ‘சண்டக்கோழி 2’ வருகிற ஆயுத பூஜை வெளியீடாக அக்டோபர் 19 வெளியாகிறது.

Keerthy SureshSandakozhi 2
Comments (0)
Add Comment