மின்மினி- விமர்சனம்

தமிழில் புதிய முயற்சியில் ஒரு மென்மையான சினிமா

2016-ஆண்டில் நண்பர்களுக்குள் நடக்கும் சில சம்பவங்களின் தொடர்ச்சியை 2024-ஆம் ஆண்டு அவர்கள் வளர்ந்த பின் அவர்களை வைத்தே காட்டியிருக்கிறார் இயக்குநர். அட்டகாசமான இந்த முயற்சிக்கு முதலில் பாராட்டுக்கள். கெளரவ் காளை, பிரவீன் கிஷோர் இருவருக்குமான நட்பும் மோதலும் தான் களம். ஒரு பெரிய விபத்து மூலம் இருவரில் ஒருவருக்கு ஒரு இழப்பு நேர்கிறது. அதன்பின் கதைக்குள் நாயகி எஸ்தர் அணில் வருகிறார். அதன்பிறகான இவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களே படத்தின் கதை

கெளரவ் காளை, பிரவீன் கிஷோர் இருவரும் நல்ல நடிப்பால் வசீகரிக்கிறார்கள். எட்டு வருடங்களுக்கு முந்தைய காட்சிகளில் துறுதுறுவென நடித்த அவர்கள், எட்டு வருடங்களுக்குப் பிறகு எதார்த்தமாக நடித்துள்ளனர். எஸ்தர் அணில் தன் கேரக்டர் உணர்ந்து நன்றாக நடித்துள்ளார். ஏனைய கேரக்டர்களில் சிலர் கவனம் குவிக்கிறார்கள்

கதீஷா ரஹ்மானின் இசையில் ஒரு பாடல் சுகமான ராகம். தத்துவம் சார்ந்த ஒரு பாடலும் நச். பின்னணி இசை பாஸ்மார்க் வாங்குகிறது. ஒளிப்பதிவாளர். எட்டு ஆண்டுகளுக்கான வித்தியாசத்தை தனது லைட்டிங் மூலம் காட்டியுள்ளார். வெல்டன்

அன்பும் அழகுமாய் முதல் பாதியில் பயணிக்கும் கதை, பின்பாதியில் தத்துவத்தை நோக்கிப் பயணிக்கிறது. இந்த தத்துவப்பயணத்தில் நிறைய லாஜிக் கேள்விகள் இருப்பது மைனஸ். தத்துவத்திற்கும் அறிவுரைக்கும் நூலிழை தான் வித்தியாசம் என்பதால் ஒரு கட்டத்தில் மெல்லிய பிரச்சார நெடி படத்தில் தெரிகிறது. முன்பாதியின் கலகலப்பிற்காகவும், வித்தியாசமான முயற்சிக்காகவும் மட்டுமே மின்மினியை ஒருமுறை ரசிக்கலாம்
2.75/5

Actor Pravin KishoreDirector Halitha ShameemMinmini movie