இயக்குநர் பாலாஜி வைரமுத்து பஞ்சராக்ஷரம் என்ற படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். டைட்டிலில் வித்தியாசம் தென்படுவதால் படமும் சின்ன க்யூரியாசிட்டியை ஏற்படுத்தியுள்ளதாய் படக்குழுவினர் நம்புகின்றனர். நேற்று படத்தின் பிரஸ்மீட் நடந்தது. அதில் கலந்துகொண்டு நாயகன் சந்தோஷ் பேசியதாவது,
இப்படம் அனைவரிடமும் சென்றடைந்திருக்கிறது. இப்படத்தில் ஏதோ இருக்கிறது என்று பலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கேற்றால்போல், ஏமாற்றம் தரும் படமாக நிச்சயம் இருக்காது. இயக்குநர் பாலாஜியை இரண்டு வருடங்களாக தெரியும். அவர் சிறிய கதையாக இருந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் ஆராய்ந்து எழுதுவார். இந்த கதையைப் பற்றி கூறும்போது எனக்கு பிடித்து விட்டது. ஆனால், இப்படம் தனி நாயகன் படமாக இல்லாமல் 5 முக்கியமான பாத்திரங்கள் இருக்கும் என்றார்.
கதை தான் ஹீரோ ஆகையால் நான் இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறினேன். இந்த குழுவினருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் நண்பராக தான் இப்படத்தை எடுத்தோம். எங்களின் நட்பு வருங்காலங்களிலும் தொடரும். காற்றுக்கு எல்லை இல்லை என்பது போல், என்னுடைய வாழ்க்கையும் எல்லை இல்லாமல் இருக்கும்படியான ஒரு கதாபாத்திரம்.