ஒவ்வொரு கட்டுக்கும் ஒரு வெட்டு என படத்தை எடுத்து வைத்துள்ளார் அறிமுக இயக்குநர் அனல் அரசு
வடசென்னையில் பாக்ஸிங்கில் வெல்லும் வேட்கையிலுள்ள தன் அண்ணனை கொலை செய்தவர்களை பலியெடுக்கிறார் ஹீரோ சூர்யா சேதுபதி. அவரால் கொலையுண்டவர் ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அதனால் ஹீரோ சிறார் சிறைக்குச் செல்கிறார். ஜெயிலில் வைத்து ஹீரோ சூர்யா சேதுபதியைப் போட்டுத்தள்ள ஒரு பெருங்கும்பல் சுத்துகிறது. அதில் வீழாமல் ஹீரோ எப்படி வீழான் ஆனார் என்பதே கதை
பரவாயில்லை. முதல் படத்திலே ஆக்சனில் அசத்தியுள்ளார் சூர்யா. செண்டிமெண்ட் காட்சிகளில் தான் இன்னும் கவனம் கொள்ள வேண்டும். ஆடுகளம் நரேன், சம்பத், வரலெட்சுமி, தேவதர்ஷினி, கொலையாளிகளாக வரும் கொடூர தோற்றமுள்ள இளைஞர்கள் அனைவரும் வெகு சிறப்பாக நடித்துள்ளனர்
படத்தை மொத்தமாக காப்பாற்றியிருப்பது சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை தான். மனிதர் பின்னியெடுத்துள்ளார். ஒளிப்பதிவும் ஆகத்தரமாக அமைந்துள்ளது. சண்டைக்காட்சிகளில் எல்லாம் அனல் அரசுவின் அனல்.
சினிமாட்டோகிராபி, ஸ்டண்ட் கொரியோகிராபி, பின்னணி இசை இந்த மூன்றுமே படத்திற்கு போதும் என்று அனல் அரசு முடிவெடுத்துள்ளார் போல. படத்தில் இந்த மூன்று அம்சங்களைத் தவிர்த்து பெரிதாக எதுவும் வொர்க் ஆகவில்லை. கதையோடு நாம் கைகோர்க்கவே முடியவில்லை. கதையில் வரும் எல்லோரிடமும் ரத்தக்கறை. ஆக கதற கதற ஆக்சன் விரும்பும் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இந்தப் பீனிக்ஸ் பிடிக்கலாம். மற்றவர்களுக்கு வாய்ப்பில்லை
2.5/5