ரயில்- விமர்சனம்

யார் வந்தேறி என்ற கேள்விக்கு விடையளித்துள்ளது ரயில்

குடித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் திரிகிறார் நாயகன் குங்குமராஜ். அவரின் மனைவி வைரமாலா கணவனை மனதளவில் வெறுக்கிறார். இவர்களின் வீட்டில் உள் போர்ஷனில் ஒரு வடநாட்டு இளைஞன் வாடகைக்கு இருக்கிறான். அவன் நல்ல உழைப்பாளி. அதுவே நம் மண்ணின் மைந்தன் குங்குமராஜுக்கு கொலைவெறியை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே சிலபல பிரச்சனைகள் எழுகிறது. முடிவில் வந்தேறி என்ற வெறுப்பு வாதம் நியாயமா? என்ற கேள்வியோடு படம் நிறைவுறுகிறது

குங்குமராஜ் எதார்த்தமாக நடித்துள்ளார். செண்டிமெண்ட் காட்சிகளில் இன்னும் ஸ்கோரிங் தேவை. நாயகி வைரமாலா தன் அப்பாவிடம் உடையும் காட்சி ஒன்றில் கவனிக்க வைக்கிறார். அப்பாவாக நடித்தவரும் இயல்பாக நடிக்க முயற்சித்துள்ளார். பர்வேஸ் மெஹ்ரூ தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்த முயன்றுள்ளார். நடிகர்களில் சிலர் இன்னும் சிறந்திருக்க முடியும்

S.J ஜனனி இசையில் நல்ல முதிர்வை கொண்டிருக்கிறார். இரண்டு பாடல்கள் பரவாயில்லை ரகம். தேனி ஈஸ்வரர் வழக்கம் போல் ஒளிப்பதிவால் தன் இருப்பை சிறப்பாக்கியுள்ளார்.

நல்ல கதையோடு வந்துள்ள படம் நல்ல திரைக்கதையாக வரவில்லை. படத்தில் நடைபெறும் துயரத்திலும் மகிழ்ச்சியிலும் நம்மால் பங்கு பெறவே முடியவில்லை. கதாப்பாத்திரங்களோடு நம்மை ஒன்ற வைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.

ரெயில்- பெயில் இல்லை அவ்வளவே
2.75/5

Rail movieSiewctor bhasker sakthi