சென்ற முறை மத்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ‘பத்ம விபூஷன்’ விருது தரப்படலாம் என்று ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஊடகங்களில் செய்தி வெளியானது, இடையில் என்ன அரசியல் நடந்ததோ? பத்ம விருதுகள் அறிவிப்பில் ரஜினிக்கு பத்ம விபூஷன் கொடுக்கப்படவில்லை.
அப்படி ஒரு சந்தேகம் தான் இன்றும் ரஜினிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று செய்தி பரவிய போது எல்லோரிடத்திலும் இருந்தது.
நல்ல வேளையாக ரஜினிக்கு பத்ம விபூஷன் விருதை முறையாக அறிவித்து ரஜினிக்கும், அவரது ரசிகர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை தந்திருக்கிறது மத்திய அரசு.
விருது விஷயம் ரஜினியின் காதுகளை எட்டவும் உடனடியாக ட்விட்டர் மூலமாக கருத்து தெரிவித்து விட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :
”எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாகும். இந்த விருதின் மூலம் நான் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன். இதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த என் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகிய அத்தனைபேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்”.
ரஜினிகாந்த்துக்கு ஏற்கனவே மத்திய அரசு 2000-ல் பத்ம பூஷன் விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.