ரெட்ரோ- விமர்சனம்

சூர்யாவை காப்பாற்றுமா இந்த ரெட்ரோ?

1960 தூத்துக்குடியில் வயிற்றில் வேல் பொறித்தபடி ஒரு குழந்தை அனாதையாகிறது. அந்தக் குழந்தையை ஜோஜு ஜார்ஜ் எடுத்து வளர்க்கிறார். தாதா ஆன ஜோஜு மகனையும் அப்படியே வளர்க்கிறார். இளம் வயதில் மகன் காதல் வயப்பட்டு திருந்துகிறான். அது பிடிக்காத ஜோஜு மகனுக்கு தண்டனை தர முயல்கிறார். மகன் அதிலிருந்து தப்பித்தாரா? அந்த மகனின் நிஜ வேர் என்ன? என்பதாக படத்தின் கதை விரிகிறது

ஜோஜு ஜார்ஜின் மகனாக சூர்யா நடிப்பில் வெளுத்துக்கட்டியுள்ளார். தான் ஏற்றுள்ள கேரக்டருக்கு எந்தப் பங்கமும் வராமல் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். பூஜா ஹெக்டே அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். ஜோஜு ஜார்ஜ் அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார். பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட இன்னும் பிறரும் நடித்துள்ளனர். மேலும் கருணாகரன் போன்ற திறமையான நடிகர்கள் எல்லாம் படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளனர்

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் படம் உலகத்தரத்தில் இருக்கிறது. சிங்கிள் ஷாட்டில் வரும் பாட்டும் பைட்டும் அசத்தல் ரகம். இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கார்த்திக் சுப்புராஜ் படம் என்றால் மட்டும் ஓவர் டூட்டி பார்க்கிறார் போல.பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது

தொழில்நுட்ப ரீதியாக கார்த்திக் சுப்புராஜ் அசுரப்பாய்ச்சலை படத்தில் நிகழ்த்தியுள்ளார்..ஆனால் திரைக்கதை மற்றும் எமோஷ்னலில் முழுவதுமாக கோட்டை விட்டுள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதையைவே திருப்பிப் போட்டுள்ளார். மேலும் படத்தின் கதையில் துளிகூட புதிய அம்சங்கள் இல்லை. சிற்சில மொமெண்ட்ஸ் மட்டுமே படத்தைத் தேற்றுகின்றன. சூர்யாவிற்கு இது கங்குவாவை விட நல்ல படம். அவ்வளவு தான்

2.75/5

Actor Suriyaactress Pooja HegdeDirector Karthik SubbarajRetro movie