சூதாட்ட கலாச்சாரத்தின் பின்னணியில் ஒரு கதையை கையிலெடுத்துள்ளார் ஜேசன் சஞ்சய்
ஆகப்பெரிய தாதாவான சம்பத்தின் பணத்தை சூதாட்டத்தில் போடுகிறார் ஒருவர். அவரைக் கொலை செய்கிறார் சூதாட்ட கிளப் ஓனர். இந்த விசயம் சம்பத்திற்கு தெரியாது. கட் செய்தால் ஹீரோ சந்தீப் கிஷன் தன் அம்மாவின் நூலகத்தை மீட்க சூதாடச் செல்கிறார். அங்கு சூதாட வருபவர்களை வச்சி சூழ்ச்சியால் பணம் பறிக்கும் முறையைக் கண்டுபிடித்து அவர்களோடு மோதுகிறார். மோதலின் முடிவு தான் படத்தின் கதை
ஹீரோவாக சந்தீப் கிஷன் டெடிகேட்டோடு நடித்துள்ளார். நல்ல திறமையான நடிகர் என்பதை பல காட்சிகளில் உணர்த்துகிறார். நாயகி பரியா அப்துல்லா கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். ராஜு சுந்தரம் ஓரளவு ஸ்கோர் செய்கிறார். அன்புதாசன், சம்பத் முதல் இதர நடிகர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைக்கிறார்கள்
தமனின் இசையில் பெரிய வைப் இல்லை. பாடல்களும் பெரிதாக ஒட்டவில்லை. கிருஷ்ணா வசந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம். லைட்டிங் கலரிங் என ஷாட்ஸை அழகாக எடுத்துள்ளார்
இயக்குநர் ஜேசன் சஞ்சய் சூதாட்டம் போதைப்பொருள் யூசேஜ் ஆகியவற்றையே அதிகமாக படத்தில் கையாண்டுள்ளார். குறிப்பாக படத்திலுள்ள பாசிட்டிவ் கேரக்டர்ஸ் யாரும் போதைப்பொருள் பயன்படுத்துவது தவறு என்பதைச் சொல்லவேயில்லை. ஷாக்கிங்! படத்தின் திரைக்கதை பல இடங்களில் பல்லிளிக்கிறது. ஒரே ஆறுதல் படம் விறுவிறு என போகிறது
2.75/5