விஜய், அஜித் யாருக்கு அரசியல் செட் ஆகும்? – எஸ்.ஜே.சூர்யா ஓப்பன் டாக்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மான்ஸ்டர்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் ஆகியிருக்கிறது.

அந்த மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்து கொண்டார் எஸ்.ஜே.சூர்யா.

சந்திப்பில் அவர் பேசியதாவது, ”வாலி”, ”குஷி” படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குவதற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. அந்த லட்சுமிகளை எல்லாம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

ஏனென்றால் நான் நடிகனாகவே ஆசைப்பட்டு வந்தேன். அதன்பிறகு ‘நியூ’ படத்தில் ஹீரோவாக நடித்து என்னுடைய நடிப்புக் கேரியரை தொடர்ந்தேன். தொடர்ந்து ‘இசை’, ‘இறைவி’ என அடுத்தடுத்த படங்கள் நடித்தேன்.

இன்று ‘மான்ஸ்டர்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியப் பெற்றிருக்கிறது. என்னுடைய இலக்கு 100 கிலோ மீட்டர் என்றால் அதில் 20 கிலோ மீட்டர் தான் ஓடியிருக்கிறேன். மீது 80 கிலோ மீட்டரும் ஓடி விட்டால் அதுவே எனக்கு பெரிய சந்தோஷம்.

ஒவ்வொரு நடிகனும் தயாரிப்பாளர் ஆனால் திமிர், ஆனவம் எல்லாம் அடியோடு காணாமல் போய் விடும். நான் படம் தயாரித்த போது அதை உணர்ந்தேன்.

என்றவரிடம் விஜய், அஜித் இருவரில் யாருக்கு அரசியல் செட் ஆகும் என்று கேட்டபோது, ”இருவர்களுடனும் சேர்ந்து படம் பண்ணியவன் என்ற முறையில் சொல்கிறேன். இரண்டு பேருமே ஒன்றை நினைத்து விட்டால் அதை நிச்சயம் செய்து முடிப்பவர்கள். அவர்கள் விருப்பப்பட்டு அரசியலுக்கு வந்தால் இரண்டு பேருமே அதில் ஜெயிக்கக் கூடியவர்கள் தான். அதில் யார் முதலில் அரசியலுக்கு வருவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்.

ajithMONSTERSJ Suriyavijay
Comments (0)
Add Comment