எங்கே நம்பிக்கை இருக்கிறதோ அங்கே அற்புதங்கள் நிகழும் என்பார்கள். சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி சரவணன் விளம்பரப் படங்கள் நடிக்கும் போது சிற்சில அற்புதங்கள் நடைபெற்றது. ஆனால் விளம்பர படத்திற்கும் வெகுஜன படத்திற்கும் வித்தியாசம் நிறையா இருக்கே…
மருத்துவ விஞ்ஞானியான சரவணன் பூஞ்சோலை எனும் தன் கிராமத்திற்கு வந்து சேவை செய்ய நினைக்கிறார். சுகர் என்ற கொடிய டிசிஸை வெல்லும் மருந்து ஒன்றை கண்டுபுடிக்க முனைகிறார். இதற்கிடையில் காதல்,கல்யாணம், காமெடி, ஆடல், பைட் என படுத்துகிறார். வில்லன் கும்பல் அவரை நீ மருந்துலாம் தயாரிக்கக் கூடாது அமுல்பேபி என்று அவரை செல்லத்தட்டு தட்டுகிறார்கள். தட்டுபவர்களின் முட்டெலும்பை உடைத்து அண்ணாச்சி எப்படி சுகர் மருந்தை கண்டுபுடித்தார் என்பதாக லெஜண்ட் கதை விரிகிறது
மருந்து கண்டுபுடிக்கும் விஞ்ஞானி அண்ணாச்சிக்கு மருந்துக்கு கூட நடிப்பு வரமாட்டேன் என்கிறது. ஹீரோயின் உள்பட திரை தொட்ட நடிகர்களின் கேரக்டர்கள் எல்லாமே செயற்கைத் தனமாக இருக்கிறது.
படத்தின் டெக்னிக்கல் ஏரியாவில் மாஸ் காட்டியிருப்பார்கள் என்றால் அங்கும் சொதப்பல் தான். ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் பில் போடும் வேலையை மட்டும் தான் பார்த்திருப்பார்கள் போல. எல்லா செட்வொர்க்குகளும் பப்பரப்பே என்று பல்லிளிக்கிறது. வேல்ராஜின் கேமரா மட்டும் பிரம்மாண்டமாய். அதுவும் சில இடங்களில் ஓவர் பளீச். எடிட்டிங் தான் டோட்டல் டிஸப்பாயிண்டிங். ஒவ்வொரு சீனுக்கும் முழுமையில்லாத எடிட்டிங் இரிடேட்டிங். ஹாரிஸ் ஜெயராஜ் தன்னிடமுள்ள பழைய ஸ்டாக்ஸை எல்லாம் அள்ளி கொடுத்திருக்கிறார் போல. பாடல்கள் & பேக்ரவுண்ட் ஸ்கோர் ம்ஹும்
மருத்துவத்தை குறைந்த விலைக்கும் இலவசமாகவும் மடைமாற்றும் படைப்பு தான் என்றாலும் திரைக்கதையில் துளியும் நேர்த்தியில்லை..
டைட்டிலில் இருக்கும் லெஜண்ட் படத்தில் யாருக்கும் இருந்த மாதிரியே தெரியவில்லை. அதனாலே லெஜண்ட் ஜொலிக்கவில்லை
2/5