நல்லவன் வகுக்கும் திட்டங்களை விட, வல்லவன் வகுக்கும் திட்டங்களுக்கு வீரியம் அதிகம். இந்த வல்லவன் வகுத்ததடா வீரியமாக அமைந்துள்ளதா?
இரண்டு திருடர்கள், ஒரு கெட்ட போலீஸ், போலி லவ்-ஐ முதலீடாக கொண்டுள்ள ஒரு லேடி, வட்டிக்கு கொடுத்துவிட்டு, அதைத் தராதவர்களை மிரட்டும் மிரட்டல் வில்லன், இவர்களுக்கிடையே மிகவும் கஷ்ட ஜீவனம் செய்யும் ஒரு கால்டாக்ஸி பெண். இவர்களை மையப்படுத்தி தான் படத்தின் மொத்தக்கதையும்
தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாட்சி, ஆதித்யா, ரெஜின் ரோஸ் இவர்கள் தான் படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்கள். இவர்கள் எல்லோரும் தங்களால் முடிந்த நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். இருப்பினும் இயக்குநர் வினாயக் துரை இன்னும் எல்லா நடிகர்களிடமும் நல்ல நடிப்பை வாங்கியிருக்கலாம்
சகிஷ்னா சேவியரின் இசை படத்தின் களத்தை விட்டு வெளியேறாமல் இசைத்துள்ளது. கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவு தரமாக அமைந்துள்ளது. படத்தின் பட்ஜெட்-ஐ காட்டிக்கொடுக்காத அவரது கேமராவிற்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு.
ஒவ்வொரு கேரக்டர்களின் கதைக்குள்ளும் இன்னொரு கேரக்டரை இணைத்த விதமும், பகவத் கீதையை கதைக்குள் ஒரு ரெபரன்ஸாக வைத்த திறனும் பாராட்டத்தக்கது. நல்ல ஆக்கத்திற்கான சான்றாக படத்தின் பல காட்சிகளைச் சொல்ல முடியும். சிற்சில கூர்மையான விசயங்களைச் சேர்த்திருந்தால் படம் மேலும் வலிமையாக அமைந்திருக்கும். வல்லவன் வகுத்ததடா நல்ல முயற்சி
3/5