இன்றைய தேதியில் தமிழ்சினிமாவின் பிஸியான ஹீரோக்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.
அந்தளவுக்கு டஜன் கணக்கில் படங்களை கைவசம் வைத்திருந்தாலும், தேடி வருகின்ற எல்லாப் படங்களையும் அவர் பணத்துக்காக வாரிப் போட்டுக் கொள்வதில்லை. மாறாக நல்ல கதையம்சமும், இதுவரை தான் ஏற்று நடிக்காத கதாபாத்திரமும் இருக்கிறதா என்பதைப் பார்த்து தான் கமிட் செய்து கொள்கிறார்.
அப்படியிருந்தாலும் அவர் வசம் தான் அதிக படங்கள் இருக்கின்றன.
குறிப்பாக பல ஆண்டுகளாக இயக்குநராக வாய்ப்பு கிடைக்காமல் திறமையோடு இருக்கும் இயக்குநர்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் விஜய் சேதுபதியை சில தயாரிப்பாளர்கள் சம்பளத்தால் அடித்து கால்ஷூட் வாங்க முயற்சித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று விஜய் சேதுபதிக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும், எங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறது.
ஆனால் விஜய் சேதிபதியோ நிறுவனத்தை விட எனக்கு கதை முக்கியம் நீங்கள் தயாரிக்கப் போகிற படத்தின் கதையை என்னிடம் முதலில் சொல்லுங்கள், அதன் பிறகு நடிப்பதா வேண்டாமா என்கிற முடிவைச் சொல்கிறேன் என்றாராம்.
10 கோடி ஒரே பேமண்ட் என்றதும் விஜய் சேதுபதி சம்மதித்து விடுவார் என்று நம்பி வந்த தயாரிப்பாளர் ஏமாற்றத்தோடு திரும்பியிருக்கிறார்.