பல போராட்டங்களை கடந்து தொழிலில் வெற்றிபெற்ற விஜயானந்த் என்ற தனிமனித வழ்வைப்பற்றிய பதிவே விஜயானந்த் படம்
இளம் வயதில் பெரிய பெரிய தொழில் முயற்சிகளை எடுக்கிறார் ஹீரோ நிஹால். அவரது முயற்சிக்கு வீட்டில் பெரியளவில் ஆதரவில்லை..அதைத்தாண்டி அவர் எப்படி ஜெயித்தார் என்பதே படம்
நிஹால் விஜயானந்த் கேரக்டரில் இயல்பாக நடித்துள்ளார். மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் சில படத்தில் இருக்கின்றன. அந்தக் காட்சிகளில் இன்னுமே அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கலாம். நாயகி சிரி பிரஹலாத் கேரக்டருக்கு பெரிய ஸ்கோப் எதுவும் இல்லை. வில்லனாக வரும் சிலர் கவனம் ஈர்க்கிறார்கள். அப்படியே ஹீரோ நண்பர் கேரக்டரும் இன்ட்ரஸ்டிங்
கோபி சுந்தர் இசையில் ஒரு மெலோடி பாடல் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை பெரிய ஏமாற்றமில்லை. கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவில் நல்ல மெச்சூரிட்டி லெவலைக் கொண்டு வந்துள்ளார். எடிட்டர் படத்தை 25 நிமிடம் வெட்டியிருக்கலாம். இயக்குநரும் அதற்கு சப்போர்ட் செய்திருக்கலாம்
இயக்குநர் ரிஷிகா சர்மா இந்தப் பாசிட்டிவான வாழ்க்கை வரலாற்று பதிவை இன்னும் சற்று கமர்சியல் கலந்து சொல்லிருக்கலாம். சம்பவங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை திரைக்கதைக்கும் கொடுத்திருக்கலாம். காட்சிகளும் எல்லாமே பெரிய பெரிய காட்சிகள் என்பதால் ஆவணப்பட Feel வருகிறது
விஜயானந்த்- வெறும் முயற்சி மட்டுமே
2.5/5
#Vijayanand