அந்தகன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியில் பெரு வெற்றிபெற்ற அந்தாதுன் படம் தான் தமிழில் அந்தகனாக வந்துள்ளது. ரிசல்ட் எப்படி?

லண்டனில் உள்ள கான்செட்டில் பாட வேண்டும் என்பது பாடகர் பிரசாந்தின் நோக்கம். அதற்காக அவர் பார்வையற்றவராக நடிக்கிறார். பிரியா ஆனந்த் ஹோட்டலில் பாடி சம்பாதித்து வரும் அவர் பிரியா ஆனந்தின் காதலையும் சம்பாதிக்கிறார். ஹோட்டலில் பிரசாந்த் பாடும் அழகைப் பார்த்து நடிகர் கார்த்திக் அவரை ஒரு குறிப்பிட்டு நாளில் தன் வீட்டிற்கு வந்து பாட புக் செய்கிறார். பிரசாந்த் பாடவரும் நாளில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது. அதன்பின் பிரசாந்தின் பயணம் என்னானது? என்பதே அந்தகன் கதை

பொருத்தமாக தைக்கப்பட்ட சட்டைபோல் இந்தப்படத்திற்கு பிட்-ஆக இருக்கிறார் பிரசாந்த். டக் டக் என பாடிலாங்வேஜை மாற்ற வேண்டிய இடங்களில் நன்றாகவே நடித்துள்ளார். சிம்ரனின் ஸ்கோரிங் படத்தில் அபாரம். நல்ல நடிப்பு. பிரியா ஆனந்த் க்ளாமர் குயினாக வந்து இளைஞர்களை கவரும் வேலையைச் செய்கிறார். நடிகர் கார்த்திக் படத்தில் நடிகராகவே வந்து ஆச்சர்யமூட்டுகிறார். சமுத்திரக்கனி வழக்கமான வில்லனாக வந்தாலும் வினிதா விஜயகுமாரோடு சேர்ந்து சின்னதால கலகலப்பை ஏற்படுத்துகிறார். ஊர்வசி யோகிபாபு கூட்டணி கதையில் முக்கியப் பங்காற்றுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் தன் கேரக்டர் உணர்ந்து ஸ்கோர் செய்துள்ளார்

சஸ்பென்ஸ் திரில்லிங் என ட்ராவல் செய்யும் இப்படத்திற்கு ஏற்ற வகையில் பின்னணி இசை அமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். பாடல்கள் ஓகே ரகம். அமரன் படத்திலுள்ள சந்திரனே சூரியனே பாடலை பயன்படுத்திய விதம்/இடம் இரண்டும் செம்ம. ஒளிப்பதிவாளர் தன் பணியை கனகச்சிதமாகச் செய்துள்ளார்

படத்தின் துவக்கம் சற்று அயர்ச்சியை ஏற்படுத்தினாலும் 15-ஆவது நிமிடத்தில் படம் வேகமெடுக்கத் துவங்குகிறது. எங்குமே படம் பெரிதாக போரடிக்கவில்லை. சின்னச் சின்ன லாஜிக் ஓட்டைகள் தெரிந்தாலும் படத்தில் தொடர்ந்து ஒரு எதிர்பார்ப்பு நிலவுவதால் இந்த அந்தகன் பாஸ்மார்க் வாங்குகிறார்
3/5