சின்ன வயசு நடிகைகளுக்கு சிங்கம்புலி சொன்ன யோசனை!

Get real time updates directly on you device, subscribe now.

Singam-Puli

புதுமுக டைரக்டர் ஆர்வியார் இயக்கியுள்ள படம் ‘அஞ்சுக்கு ஒண்ணு’. 5 புதுமுக நடிகர்களும், 2 புதுமுக நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படம் கொத்தனார்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக தயாராகியிருக்கிறது.

இந்த படத்தில் நடித்துள்ள புதுமுக நடிகர்கள் அனைவரும், கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே படப்பிடிப்பு நடந்த 40 நாட்களும் பல் தேய்க்காமல், குளிக்காமல் நடித்தார்களாம். ஊருக்கெல்லாம் குடியிருக்க வீடு கட்டிக்கொடுக்கும் கொத்தனார்கள், தாங்கள் குடியிருக்கக்கூட வீடு வாசல் இல்லாமல் ப்ளாட்பாரத்தில் வாழ்க்கையை கழிப்பதை முக்கிய கதைக்கருவாகக்கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் மேஸ்திரி கேரக்டரில் நடித்திருக்கும் சிங்கம்புலி படத்தில் நடித்திருந்த இரண்டுபுதுமுக நடிகைகளுக்கும் டிப்ஸ் கொடுத்தார்….

உமாஸ்ரீ, மேக்னா ரெண்டுபேரும் தமிழ்ல பேசுறாங்க… இனிமே தமிழ்ல பேசாதீங்க. தமிழ்ல பேசினா உங்களுக்கு யாரும் சான்ஸ் தர மாட்டாங்க. தமிழ் தெரிஞ்சாலும் இங்கிலீஷ்ல பேசணும். தெரியலேன்னா தப்பு தப்பாச்சும் இங்கிலீஷ்ல பேசுங்க… அப்பத்தான் உங்களுக்கு சான்ஸ் தருவாங்க… என்று அட்வைஸ் செய்தார்.