ஆன்டி இண்டியன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

திரைப்படங்களை விமர்சனம் செய்து வரும் ப்ளுசட்டை மாறன் இயக்கியிருக்கும் முதல்படம் ஆன்டி இண்டியன். இப்படத்தில் அடித்து ஆடியிருக்கும் அவருக்கு முதல் படியே முத்திரைப்படியாக அமைந்துள்ளது

சுவரில் படம் வரையும் ஆர்ஸ்டிஸ் பாட்ஷா என்பவன் கொலை செய்யப்படுகிறான். சான்றுகளின் அடிப்படையில் முஸ்லிமாக இருக்கும் அவன் சம்பிரதாய அடிப்படையில் முஸ்லிமாக இல்லை என்பதால் அவனை தங்கள் இடத்தில் அடக்கம் செய்ய முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உடனே பாட்ஷாவின் உடலுக்கு இந்து சாயம் பூசப்பட்டு இந்துக்களின் இடுகாட்டுக்குச் சென்றால், “ரிக்கார்ட்கள் படி முஸ்லிமாக இருந்தவரின் பாடியை இந்து இடுகாட்டில் அடக்கம் செய்ய முடியாது என்கிறார்கள். இதற்கிடையில் கிறிஸ்தவர்கள், பாட்ஷாவின் அம்மா சுனாமி நேரத்தில் கிறிஸ்தவராக மாற்றப்பட்டவர் அதனால் இந்தப்பாடியை நாங்கள் அடக்கம் செய்கிறோம் என்கிறார்கள். இந்தச் சம்பவத்தையொட்டி ஒரு எலக்‌ஷன் சூதாட்டமும் கலந்துகொள்ள முடிவில் இறந்த உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டது? இதுதான் கதை. ஆனால் இதற்குள் இருக்கும் அரசியலின் ஆழம் மிக அடர்த்தியானவை. இந்தக்கதையை யாரிடம் சொன்னாலும் அய்யோ என அடித்துக்கொண்டு ஓடியிருப்பார்கள். காரணம் இந்தக்கதையை சார்பற்ற தன்மையில் சமுத்துவமாய் திரையில் காட்டுவது மிகவும் கடினம். ஆனால் அறிமுக இயக்குநர் ப்ளுசட்டைமாறன் அதை மிக லாவகமாக கையாண்டுள்ளார். சபாஷ்!

படத்தில் ராதாரவி, ஆடுகளம் நரேன், முத்துராமன் ஆகியோர் நிறைய ஸ்கோர் செய்திருந்தாலும், படத்தில் வரக்கூடிய புதுமுகங்கள் மிக அழகாக ஈர்க்கிறார்கள். நடிகர்களின் தேர்வும் அவர்களை இவ்வளவு சிறப்பாக நடிக்க வைத்தமைக்கும் இயக்குநருக்கு இன்னொரு பாராட்டு

விஜய்டிவி பாலாவின் காமெடி ஏரியா ஒன்று படத்தில் உண்டு. அந்தக்காட்சியில் சிரிப்பில் வயிற்றுவலி வருவது கன்பார்ம்

சின்ன பட்ஜெட் படம் என்பதை பல காட்சிகள் நினைவுப்படுத்தினாலும் படம் தரக்கூடிய உணர்வை அவை தடை செய்யவே இல்லை. ஒளிப்பதிவு பின்னணி இசை இவையிரண்டும் கதையின் போக்கிற்கு ஏற்ப அமைந்துள்ளது

இங்குள்ள அரசியலமைப்பும் அதிகாரமும் மதத்தையும் அது சார்ந்த கலவரங்களையும் தங்களின் சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும் என்பதை ப்ளீரென சொல்லியிருக்கிறது ஆன்டி இண்டியன்.

3.5/5