பேயைப் பார்க்கணுமா? எஸ்.ஜே சூர்யா தகவல்!
ஆஹா ஓடிடி 100% தமிழ் என்று பக்காவாக களம் இறங்கி வருகிறது. சமீபத்திய நாட்களில் அவர்கள் வெளியீட்டு வரும் படைப்புகள் கவனம் பெற்று வருகின்றன. தற்போது Anya’s tutorial என்ற வெப்சீரிஸ் ஒன்றை ஆஹா ஓடிடி தயாரித்துள்ளது. பல்லவி இயக்கியுள்ள இந்த சீரிஸில் ரெஜினா கஸன்ட்ரா நாயகியாக நடித்துள்ளார். ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த வெப்சீரிஸ் வரும் ஜுலை 1-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த சீரிஸ் சம்பந்தப்பட்ட பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் சுந்தர் சி, எஸ்.ஜே சூர்யா நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விஜய் ஆண்டனி பேயைப் பார்க்க வேண்டும் என்பது எனக்கு ஆசை என்றார். அதற்கு பதில் அளித்துப் பேசிய எஸ்.ஜே சூர்யா, “ஒரு படம் எடுத்து அது ப்ளாப் ஆனா பேயைப் பார்க்கலாம்” என்று பதிலளித்தார்.
But..இந்த வெப்சீரிஸ் பேயைக் காட்டி சக்சஸ் ஆகும் என்றே தெரிகிறது. காரணம் ட்ரைலரில் அவ்வளவு குவாலிட்டி