“வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Get real time updates directly on you device, subscribe now.

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், K4 Kreations சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் படம் “வேழம்”. ஜுன் 24 திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.

விழாவில்
இயக்குனர் சந்தீப் ஷ்யாம் பேசுகையில், எனக்கு டைரக்சன் மீதுள்ள ஆர்வத்தை புரிந்து உணர்ந்து கொண்ட கேசவன் சார் போன்ற தயாரிப்பாளரைப் பெற்ற அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. அவருக்காக சில விளம்பரப் படங்கள் செய்துள்ளேன். அவர் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் பெரிய அளவில் வெளியாவதற்கு SP Cinemas மிகப் பெரும் பலமாக அமைந்துள்ளது. அசோக் இப்படத்தில் பல தோற்றங்களில் தோன்றுவதால் அதற்காக உயிரைக் கொடுத்து உழைத்துள்ளார். ஜனனி இந்த படத்தில் ஒரு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஐஸ்வர்யா ஒரு நல்ல நடிகை அவரது நடிப்பு இந்த படத்தில் அபாரமாக இருக்கும் . இசையமைப்பாளர் ஜானு என் வகுப்பு தோழர், நாங்கள் இணைந்து இப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எடிட்டர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவு இப்படத்திற்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், இந்த படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

Related Posts
1 of 1,622