Are you ok baby- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட உண்மைக் கதைகளில் ஒன்றை உருவி ஒரு திரைக்கதையாக மாற்றி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் லெட்சுமி ராமகிருஷ்ணன்

பலமுறை கருக்கலைப்பு செய்து காதலனோடு வாழும் முல்லையரசிக்கு ஒரு முறை கருக்கலைப்பு சாத்தியமில்லாததாக மாறுகிறது. வயிற்றில் வளரும் குழந்தையை யாரிடமும் காட்ட முடியாத சூழலில் யாருக்கும் தெரியாமல் குழந்தையைப் பெற்று சமுத்திரக்கனி அபிராமி தம்பதியினர்க்கு கொடுக்கிறார் முல்லையரசி. அபிராமி சமுத்திரக்கனி தம்பதி குழந்தையை வளர்த்து வர, கதையில் ஒரு எமோஷ்னல் திருப்பம் வருகிறது. அது எப்படியான முடிவைத் தருகிறது என்பதே படத்தின் மிச்சசொச்ச கதை

சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் பெண் சிங்கம் பெண் சிங்கம் தான் என்பதை நிரூபித்துள்ளார் அபிராமி. அவரது நடிப்பு அபாரமான நடிப்பு. சமுத்திரக்கனி அலட்டிக்கொள்ளாத நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். முல்லையரசி தான் சுமந்த கேரக்டரை சுமந்த பிள்ளையாக எண்ணி காப்பாற்றியுள்ளார். படத்தின் இயக்குநரான லெட்சுமி ராமகிருஷ்ணன் தொகுப்பாளராக நடித்துள்ளார். பாவல் நவகீதன் உள்பட சின்னச் சின்ன கேரக்டர்களும் ஓரளவு நன்றாகவே நடித்துள்ளனர்

இளையராஜாவின் பின்னணி இசை கதைக்கு ஜீவனை வழங்கியுள்ளது. பாடல்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. கிருஷ்ணகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.

கதையில் செலுத்திய கவனத்தை கேரக்டர்களுக்கான ரைட்டிங்கிலும் செலுத்தியிருக்கலாம் இயக்குநர் லெட்சுமி ராமகிருஷ்ணன். மனதில் ஆழமாக பதியும்படியான திரைக்கதை படத்திற்கு வாய்க்கவில்லை. இன்னும் சிறப்பாக எழுதி இயக்குப்பட்டிருந்தால் Are you ok baby டபுள் ஓகே சொல்ல வைத்திருப்பாள்
2.75/5