எதிர்பார்ப்பை கிளப்பிய “மின்னல் முரளி” டிரைலர்!

Get real time updates directly on you device, subscribe now.

Related Posts
1 of 3

இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி NETFLIX தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

தீய சக்தியை வென்று, உலகை காக்கும் அதி சக்தியை தரிசிக்க நீங்கள் தயாரா?. NETFLIX இன்று மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி படத்தின் தமிழ் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. 90 களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் மாறிய சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை இப்படம் சொல்கிறது. மனித உணர்வுகளின் பல பக்கங்களை தொட்டுச்செல்லும் இத்திரைப்ப்டம் பிரமாண்ட ஆக்சன் காட்சிகளும் விழாக்காலத்தில் குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது