ரசித்து ரசித்து அரியவன்படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர்!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் சினிமாவில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஈஷான், டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர் குட் சுப்பிரமணி உட்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கே எஸ் விஷ்ணு ஸ்ரீ இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய,ஜேம்ஸ் வசந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், டீசர், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இந்த படம் உலகம் முழுவதும் மார்ச் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் பற்றி படக்குழு சில தகவல்களை வெளியிட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மித்ரன் ஆர் ஜவஹர் அவர்கள் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து இயக்கி இருப்பதாகவும் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பதில் பாராட்டையும் பெரும் வகையில் அரியவன் திரைப்படம் இருக்கும் என தெரிவித்துள்ளது. அதற்கேற்றார் போல் தற்போது இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.