தமிழுக்கு வரும் ‘நோட்டா’ ஹீரோவின் தெலுங்கு படம்

Get real time updates directly on you device, subscribe now.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா – பூஜா ஜவேரி நடிப்பில் ரிலீசாகி மாபெரும் ஹிட்டான ‘துவாரகா’ படம் தமிழ் பேச வருகிறது.

ஸ்ரீனிவாச ரவீந்திரா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை தமிழில் ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் சார்பில் ஏ.என்.பாலாஜி வெளியிடுகிறார்.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, தெலுங்கில் ‘துவாரகா’ என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படமே தமிழில் ‘அர்ஜுன்ரெட்டி’ என்ற பெயரில் வெளியாகிறது.

‘நோட்டா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான விஜய் தேவரகொண்டாவின் இந்தப் படமும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

காதல், ஆக்‌ஷன், கமர்ஷியல் ஆகிய மூன்றும் கலந்த படமாக ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படம் ஹிட்டானது. அதேபோலவே இந்த அர்ஜுன் ரெட்டியும் மிகுந்த வரவேற்பை பெரும் என்றார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக விரைவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.