யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் டீசர் வெளியீடு!

Get real time updates directly on you device, subscribe now.

Dev Cinemas Pvt Ltd சார்பில் கிருத்திகா தங்கபாண்டி S தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Related Posts
1 of 8

இந்த டீசரின் தொடக்கமே தன் வண்டியை பறிகொடுத்து தவிக்கும் நடுத்தர வர்க்கத்து இளைஞனாக மிகவும் உணர்ச்சிபூர்வமாகதோன்றுகிறார் யோகிபாபு.
தன் வண்டியை மீட்க யோகிபாபு போராடுவதும் அதே வண்டியை பலர் உரிமை கொண்டாடுவதும் என பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்த டீஸர் படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது..படம் வெளியானால்
பழைய வண்டிகள் வாங்கி விற்பதில் நடக்கும் பெரும் மோசடிகள் அனைத்துமே மக்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்துவிடும் என அர்ஜுனன் பேர் பத்து படக்குழு தெரிவித்தனர்…

மேற்குத் தொடர்ச்சிமலை திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா. ராஜ்மோகன், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும், இது நடிகர் யோகி பாபுவின் 300வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.