நிஜ கபடி வீரருக்கு ஜோடியான மாளவிகா மேனன்!

Get real time updates directly on you device, subscribe now.

aruva-sanda

மிழ் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமான ”சிலந்தி” படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றதன் மூலம் டிஜிட்டல் சினிமா மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய இயக்குனர் ஆதிராஜன் தற்போது ஒரு கபடி வீரனின் காதல் கதையை, கௌரவக் கொலை சம்பவங்களின் பின்னணியில் எழுதி இயக்கி வருகிறார். இதில் கபடி வீரர் ராஜா கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்கிறார்.

இவர் பிரம்மா படத்தில் சசிகுமார் தங்கையாகவும் இவன் வேற மாதிரி படத்தில் நாயகி சுரபியின் தங்கையாகவும் விழா படத்தில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் ஐந்து படங்களின் நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மேனன் தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

அருவாசண்டை படத்தின் கதையை கேட்டதும் அசந்துவிட்டேன். குறிப்பாக இயக்குனர் ஆதி சார் கிளைமாக்ஸ் காட்சியை விவரித்த போது என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டேன். இந்த படம் தமிழ் திரையுலகில் எனக்கு ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்து தரும். பெரிய ஹீரோயின்களுக்கு அமைவது போல எனக்கான அறிமுக பாடல் காட்சியும் இருப்பதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த படத்திற்கு பிறகு தமிழில் நான் பிஸியான நாயகியாக ஆகிவிடுவேன். என்று உற்சாகம் பொங்க சொன்னார் மாளவிகா மேனன்.

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்‌ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு தரண் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதிகிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.