வசூலில் புதிய சரித்திரம் படைத்த தந்தை மகன்!

பல புகழ்பெற்ற குடும்பங்களையும்…. வெற்றிகரமான தலைமுறைகளையும்… ஒரே குடும்பத்தில் இருந்து உருவான பல நட்சத்திரங்களையும்… இந்திய திரையுலகம் சந்தித்துள்ளது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் ஒரு தனித்துவமான நிகழ்வை இந்திய திரையுலகம் கண்டுள்ளது. தந்தையும், மகனும் ஒரே ஆண்டில் மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையாளராக திகழ்கின்றனர்.
முதலில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி- அவரது நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம் வசூலுக்கான சாதனை களத்தை அமைத்தார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. சில மாதங்களுக்கு பிறகு சிரஞ்சீவியின் மகனும், ‘மெகா பவர் ஸ்டார்’ என ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவருமான ராம்சரண் அந்த சாதனையை ஒரு படி மேலே கொண்டு சென்றார்.
அவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாண்ட வெற்றி படமான ‘பெத்தி’ ( Peddi ) – ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தின் உலகளாவிய ஒட்டுமொத்த வசூலையும் முறியடித்தது. அத்துடன் 2026 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் வெளியான படங்களில் அதிக வசூலை செய்து ,பாக்ஸ் ஆபீஸ் சாம்பியனாகவும் உருவெடுத்தது. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான ‘பெத்தி’ திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுகிறது.