அசினுக்கு பெண் குழந்தை : முதல் ஆளாக வாழ்த்திய அக்‌ஷய் குமார்!

Get real time updates directly on you device, subscribe now.

asin

லையாளம், தெலுங்கு, தமிழ்ப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின்.

ஏ.ஆர்.முருகதாஸ் தயவால் ஹிந்தி கஜினியின் ஹீரோயினாக பாலிவுட்டில் அறிமுகமானவர் தொடர்ந்து அக்‌ஷய்குமார் உள்ளிட்ட ஹீரோக்களுடன் ஒரு சில படங்களில் தலைகாட்டினார்.

அப்போது அக்‌ஷய்குமாரின் நெருங்கிய நண்பரும், மைக்ரோமேக்ஸ் மொபைல் அதிபருமான ராகுல் சர்மாவுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது.

Related Posts
1 of 1,477

இரு வீட்டாரின் சம்மதத்துடன் சென்ற 2016-ம் ஆண்டு ராகுல் சர்மாவை திருமணம் செய்த அசின் திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.

இந்நிலையில் இந்த ஜோடிக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து மனம் திறந்த ராகுல் சர்மா ‘இன்று எங்களுக்கு தேவதை போல பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். கடந்த 9 மாதங்கள் எங்கள் இருவருக்கும் மறக்க முடியாத தருணங்கள்.’ என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக இந்த சந்தோஷமான தகவலைக் கேள்விப்பட்டதும் முதல் ஆளாக மருத்துவமனைக்கே நேரில் சென்று குழந்தையை கைகளில் தூக்கிக் கொஞ்சி தனது வாழ்த்துகளை தெரிவித்து விட்டு வந்திருக்கிறார் ராகுல் – அசின் இருவருக்கும் நெருங்கிய நண்பரான அக்‌ஷய்குமார்.