‘இவன் தந்திரன்’ டைரக்டருடன் கை கோர்த்த அதர்வா!

தடைகள் பல தாண்டி தமிழ்சினிமாவில் வர்த்த ரீதியாக வெற்றிப் பெற்ற படம் என்கிற பெருமையைப் பெற்றது ஆர்.கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இவன் தந்திரன்.
இப்படத்தைத் தொடர்ந்து தான் இயக்கும் அடுத்த படத்தில் தமிழ்சினிமா ரசிகர்களின் மனதில் வேகமாக பதிந்து வரும் இளம் நாயகர்களின் ஒருவரான அதர்வாவோடு இணைந்துள்ளார்.
இந்த கூட்டணி குறித்து இயக்குநர் ஆர்.கண்ணன் பேசுகையில், ” இது ஒரு மிக விறுவிறுப்பான சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்டாகும். எல்லா கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு ஆக்ஷன் ட்ராமா இது. கதாநாயகனாக அதர்வா நடிக்க உள்ளதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த கதாபாத்திரத்திற்கு அதர்வா மட்டுமே மிக பொருத்தமாக இருப்பார்.
அவரது சினிமா பயணத்தில் இது ஒரு ஸ்பெஷல் படமாக நிச்சயம் இருக்கும். எல்லா தரப்பட்ட கதைகளிலும் ஜொலிப்பவர் என பெயரெடுத்துள்ள அதர்வா இப்படத்திற்கு பலமாக இருப்பார். கதாநாயகி மற்றும் மற்ற துணை கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளோம் ” என்றார்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இசையமைப்பாளர் ரதன் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரசன்னா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இயக்குநர் ஆர்.கண்ணனின் ‘மாசாலா பிக்ஸ்’ நிறுவனமும் எம்.கே ராம்பிரசாத் அவர்களின் ‘எம்.கே.ஆர்.பி’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளன. எதிர்பார்க்கப்படும் படமாக இது மாறியுள்ளது என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.