“ரோத்தா”வால் வந்த ரோதனை! : ‘சண்டி வீரன்’ படத்துக்கு சிங்கப்பூரில் தடை
இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஸ்ரீ கிரின் புரோடக்சன்ஸ் சார்பாக எம்.எஸ்.சரவணன் வழங்க சற்குணம் இயக்கத்தில் அதர்வா மற்றும் ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம் ‘சண்டி வீரன்’.
வெளியான நாள் முதல் நல்ல விமர்சனமும் மக்களிடையே வரவேற்ப்பும் பெற்ற ‘சண்டி வீரன்’ படத்திற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘சண்டி வீரன்’ படத்தை பார்வையிட்ட சிங்கப்பூர் தணிக்கை குழு சிங்கப்பூர் காவல் துறையினரால் நிறைவேற்றப்படும் தண்டனையான “ரோத்தா” என்னும் தண்டனை படத்தில் காண்பிக்கபடுவதால் படம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.