‘அதிபர்’ படத்தில் நந்தாவுக்கு கிடைத்த சவாலான கேரக்டர்

Get real time updates directly on you device, subscribe now.

nantha

பெண் கண் ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற பட நிறுவனம் சார்பாக பி.பி சரவணன் இணை தயாரிப்பில் டி. சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘அதிபர்’.

இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள் மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவைசரளா, பாவா லட்சுமணன், ரேணுகா, சரவண சுப்பையா, சங்கிலிமுருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன் பாப், பாரதிகண்ணன், மோகன்ராம், சம்பத்ராம், சிவசங்கர், கதா.கா.திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி, ஸ்டில்குமார் கோவை செந்தில், அழகு, கோவைபாபு, கவிதா பூஜாரி, அமீர், சித்ரா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பிலிப்ஸ் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்ய விக்ரம்சிங்கா இசையமைக்கிறார்.

எழுதி இயக்குபவர் சூர்யபிரகாஷ். இவர் மாயி, திவான், மாணிக்கம், போன்ற படங்களை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனர் சூர்யபிரகாஷிடம் கேட்டோம்.

நடிகர் நந்தா இந்த படத்தில் டேவிட் என்ற வித்தியாசமான வேடமேற்கிறார். ரௌடி வேடமேற்கும் நந்தா நட்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரம்.
அடிதடியயே கொள்கையாக கொண்டிருக்கும் டேவிட் நட்புக்காக நல்லவனாக மாறி வாழும் கதாபாத்திரம் ஏற்கிறார்.

இது நந்தாவுக்கு சவாலான வேடம் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.