மெர்சல் படத்தை பார்த்துட்டு அப்புறமா பேசுங்க… : அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த அட்லி!
ராஜா ராணி, தெறி மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இளம் இயக்குநர் அட்லி. அடுத்து விஜய்யின் மெர்சல் படத்தை இயக்கி வருகிறார். வருகிற தீபாவளி வெளியீடாக இந்தப்படம் ரிலீசாக உள்ளதால் விஜய் ரசிகர்கள் படம் எப்படியிருக்கும் என்கிற ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே தொடர்ந்து விஜய் படங்களையே இயக்கி வரும் அட்லி மீது கோபப்பட்ட அஜித் ரசிகர்கள் உங்கள் இயக்கத்தில் வருகின்ற படங்கள் எல்லாமே அப்பட்டமான காப்பி என்று சமூக வலைத்தளங்களில் குற்றம் சொல்லி வருகிறார்கள்.
வழக்கமாக ஆங்கிலம், கொரியா, சைனீஸ் உள்ளிட்ட மாற்று மொழிப் படங்களைத் தான் இயக்குநர்கள் சுடுவார்கள். ஆனால் அட்லியோ ராஜா ராணி மௌனராகம் படத்தின் காப்பி, தெறி சத்ரியன் படத்தின் காப்பி என்று ஏற்கனவே ரிலீசான தமிழ்ப்படங்களையே காப்பியடிக்கிறார் என்பது தான் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது.
ஆரம்பத்தில் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத அட்லி தொடர்ந்து தன் மீது இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருவதை பொறுத்துக் கொள்ள முடியாதவராக ‘இசையில் மொத்தமே 7 ஸ்வரங்கள் தான் உள்ளது, அதில் தான் மாற்றி மாற்றி இசையமைக்க முடியும். இன்னும் பல வருடம் கழித்து ஏதாவது ஒரு பாடலை கேட்டால் கூட அதில் ராஜா சார், ரகுமான் சாரின் சாயல் இருக்கும்.
மேலும், காப்பி அடிக்கின்றேன் என்று சொல்வது எளிது, ஆனால், அந்த படத்திற்காக நான் எத்தனை கஷ்டப்படுகின்றேன், ஒரு விஷயத்தை இந்த ட்ரெண்டிற்கு ஏற்றவாறு எப்படி எடுக்கின்றோம் என்பதில் ரிஸ்க் அதிகம். நானும் எல்லோர் போலவும் உதவி இயக்குனராக இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்’ .
என்னை காப்பி அடிக்கிறேன் என்று சொன்னவர்களுக்கு ’மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அதை பார்த்து விட்டு சொல்லுங்கள் எங்கள் உழைப்பு தெரியும். அதே போல என் திறமை தெரியும். படத்தில் பல காட்சிகள் ரசிகர்களை மெர்சல் செய்யும். இதுவரை இப்படி ஒரு காட்சி வந்தது இல்லை என்று பேசும் அளவுக்கு வித்தியாசமாக இருக்கும்.” என்று அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
அட்லியின் முதல் படமான ‘ராஜா ராணி’ படம் ரிலீசானவுடன் வைக்கப்பட்ட அதன் சக்சஸ் மீட்டில் இந்தப்படம் மெளன ராகம் படம் போல இருக்கிறதே என்று நிருபர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த அட்லி ”அப்படியா? மணிரத்னம் மிகப்பெரிய லெஜண்ட். அவருடைய படம் போல என்னுடைய படம் இருக்கிறது என்று சொல்வது எனக்குப் பெருமை தான் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.