எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “அவள் பெயர் ரஜ்னி” டீசர்!

Get real time updates directly on you device, subscribe now.

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பரபரப்பான திரில் அனுபவம் தரும் டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு வெளியாகும், அடுத்த திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசரில், ஒரு பரபரப்பான விசாரணை, அதன் பின்னால் அவிழும் பல முடிச்சுகள், காளிதாஸ் ஜெயராமின் அசத்தல் நடிப்பு என, ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும் அட்டகாசமான திரில்லருக்கு உண்டான அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.சென்னை பொள்ளாச்சி கொச்சின் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமான நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு அறிவிப்புகள் வெளியாகும்.

#AvalPeyarRajni