ஐங்கரன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தேவையானதை செய்யாமல் தேவையில்லாதவற்றை சேர்ப்பதால் பயனில்லை என்பதோடு, விஞ்ஞான ரீதியாக புதிய முயற்சிகளை எடுக்கும் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற கருத்தையும் முன் வைக்கிறது ஐங்கரன்

நாமக்கல்லில் எஸ்.ஐ-ஆக அப்பா, குடும்பத்தை கவனிக்கும் அம்மாவோடு செல்லப்பிள்ளை மற்றும் விஞ்ஞானப் பிள்ளையாக வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ். சென்னை மதுரை ஆகிய நகரங்களில் நகைக்கடைகளில் கோடிக்கணக்கான வைரங்களை கொள்ளையடித்த கும்பல் ஒன்று நாமக்கல்லில் எதார்த்தமாக வந்து சேர்கிறது. அந்தக் கும்பலுக்கும் ஜிவிக்கான இணைவு ஒரு இடத்தில் வர..கயவர்களை ஐங்கரனாகி ஜிவி எப்படி வீழ்த்தினார் என்பதே கதை

ஐந்தாண்டுகளுக்கு முன்பே இப்படத்தை எடுத்திருப்பதால் ஜிவி இன்னும் இளமையாக இருக்கிறார். நடிப்பில் மெச்சூட் பெரிதாக இல்லை. காளிவெங்கட் என்ற திறமை வாய்ந்த நடிகருக்கு படத்தில் பெரிதாக ஸ்கோப் இல்லை. ஆடுகளம் நரேனை விட, ஹரிஸ் பேரீடி கவனம் ஈர்க்கிறார். மஹிமா நம்பியார் ஹீரோயினாக இருந்தாலும், பெயருக்குத் தான் படத்தில் இருக்கிறார். சித்தார்த் சங்கர் வில்லன் கேரக்டரில் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

படம் நெடுக கதை விறுவிறு என பயணித்தாலும், காட்சிகள் ஒவ்வொன்றிலும் மிகைத்தன்மையும் தொய்வும் இருப்பது சின்ன சலிப்பையே தருகிறது. முன்பாதியில் கொடுத்த லீட்-க்கு பின்பாதியில் நியாயம் சேர்த்தாலும் படத்தை ஸ்டேஸிங் செய்வதில் இயக்குநர் சற்றே தடுமாறியிருக்கிறார்..

ஒளிப்பதிவு பின்னணி இசை இரண்டும் படத்தில் பலமாக இருக்கிறது. பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்பாதியில் இருந்த மேக்கிங்கை முன்பாதியிலும் கொண்டு வந்திருக்கலாம்.

முயற்சிக்கும் இளைஞர்களை தொட்டு தூக்காவிட்டாலும் நெகட்டிவால் போட்டுத்தாக்காமல் இருங்கள் என்பதை ஸ்ட்ராங்காகச் சொன்னதிற்காக சில சமரசங்களோடு ஐங்கரனை ஏற்கலாம்

2.75/5