நாடு- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

மலைக்கிராம மக்களின் மருத்துவத் தேவையைப் பதிவு செய்துள்ள நாடு

கொல்லிமலையின் அழகியலைப் பேசும் நமக்கு அங்குள்ள மலைக்கிராம வாசிகளின் தேவைகள் தெரியவில்லை. நாயகன் தர்சன் அந்த மலைக்கிராம மக்களின் பிரதிநிதி. தன் ஊரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் அவர் ஓர் பெரும் இழப்பைச் சந்திக்கிறார். பின் அந்த ஊரில் மருத்துவரைத் தக்க வைக்க அவர் என்னென்ன முடிவுகளை எடுக்கிறார்? அந்த ஊருக்கு மருத்துவராக வரும் மகிமா நம்பியாரின் நிலைப்பாடு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை

மலைவாழ் இளைஞனாக தர்சன் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். தர்சன் சினிமா கரியரில் இப்படமே ஆழமான விதை. சின்னச் சின்ன அசைவுகளிலும் மெச்சூட் தன்மை தெரிகிறது congratulation தர்சன். மகிமா நம்பியார் நடிப்பில் கோடு கேட்டால் ரோடு போடுவார் என்பது தெரியும். இப்படத்திலும் தானொரு நல்ல நடிகை என்பதை நிரூபித்துள்ளார். அருள்தாஸ், சிங்கம்புலி, ஆர்.எஸ் சிவாஜி, உள்ளிட்ட எல்லா கேரக்டர்களும் நன்றாக நடித்துள்ளனர்

எமோஷ்னல் படங்களுக்கு இசை என்பது ஆன்மா. அதை உணர்ந்து இசை அமைப்பாளர் சத்யா அசத்தியுள்ளார். சக்திவேலின் சினிமா மலையின் கொண்டை ஊசி வளைவுகள் முதற்கொண்டு அனைத்தையும் சிறப்பாக காட்டியுள்ளது.

வலுவான கதை ஆனால் ஆடியன்ஸ் புல்லிங் கமர்சியல் ரூட்டிலும் இருக்க வேண்டும் என யோசித்து நல்ல திரைக்கதையை வழங்கியுள்ளார் இயக்குநர் சரவணன். மெயின் கதைக்குள் நீட் தேர்வை கொண்டு வந்து நிறுத்திய விதம், எளிய மக்களுக்கு மருத்துவமும் மருத்துவப்படிப்பும் எட்டாக்கனியாக மாறுவதை நோட் செய்த விதம் என படம் தேவையான பொலிட்டிகலைப் பேசுகிறது. நல்ல கலைப்படைப்பாகவும், சமூகப்படைப்பாக மாறியுள்ள நாடு நாம் வரவேற்க வேண்டிய படம்
3.75/5