‘பாகுபலி 2’ : ராஜமெளலிக்கு ஒன்றா ரெண்டா பிரச்சனைகள்?
‘இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான பிரம்மாண்டப்படம்’ என்கிற வரிகளோடு விளம்பரப்படுத்தப்பட்ட படம் ‘பாகுபலி’.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய இப்படம் உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாடப்பட்டதோடு பாலிவுட் படங்களின் வசூலை மிஞ்சும் அளவுக்கு சுமார் 600 கோடி ரூபாய் வரை வசூலில் சாதனை படைத்தது.
சரித்திரப் படம் என்றாலே சீக்வெல் இல்லாமல் இருக்குமா? ‘பாகுபலி’ ஹிட்டானதும் அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்கிற கேள்விக்கு 2016 ஆம் ஆண்டு வரும் என்று உறுதியாகச் சொன்னார் ஹீரோ பிரபாஸ்.
ஆனால் இப்போது ரிலீஸ் 2017 க்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 17 கிலோ எடை போட்ட அனுஷ்கா இரண்டாம் பாகத்துக்காக ஏற்றிய எடையை குறைக்க கால அவகாசம் கேட்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் படத்தின் போர்க்களக் காட்சிகளை நிதானமாக எடுக்க வேண்டியிருப்பதாலும், கிராபிக்ஸ் காட்சிகள் வேலைகளை முடிக்க கால அவகாசம் தேவைப்படுவதாலும் ரிலீஸ் 2017க்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதாம்.
மேலும் முதல்பாகம் மீடியாக்கள், ரசிகர்கள் எல்லோர் மத்தியிலும் நல்ல வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றதால் அதை தக்க வைக்க வேண்டிய நிர்பந்தம் ராஜமெளலிக்கு ஏற்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
அப்போ ரிலீஸ் தள்ளிப்போனதுலேயும் தப்பே இல்லை…