”ஈசன் பெற்ற ஆசை மகனே…” ”8-வது அதிசயமே…” : அஜித் மகனின் பிறந்த நாளை கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

ajith1

நேற்று முன் தினத்திலிருந்தே ட்விட்டரில் இந்த கொண்டாட்டம் களை கட்ட ஆரம்பித்து விட்டது.

அஜித் நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிறது என்றாலே அவரது ரசிகர்கள் விடிய விடிய தூங்காமல் அந்தச் செய்தியை இந்திய அளவில் ட்ரெண்ட்டிங்கில் ஏற்றி விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.

ஒரு டைட்டிலுக்கே இப்படியென்றால் அஜித் மகன் ஆத்விக்கின் பிறந்த நாள் என்றால் சும்மா இருப்பார்களா என்ன?

தமிழகம் முழுக்க பரவிக்கிடக்கின்ற அஜித் ரசிகர்கள் ஆத்விக்கின் பிறந்தநாளுக்கு கட்-அவுட் வைப்பது, பெரிய பெரிய சைசுகளில் போஸ்டர்களை ஒட்டுவது என மிரட்டி விட்டார்கள். ”ஈசன் பெற்ற ஆசை மகனே…”, ”8-வது அதிசயமே…” ”தல பெற்ற தலைமகனே…” போன்ற தீப்பொறி வசனங்களும் போஸ்டர்களில் பளபளத்தது.

Related Posts
1 of 54

ajith3

வெறும் போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் என்பதையும் தாண்டி அன்னதானம் செய்வது, நலிந்தவர்களுக்கு உதவித்தொகை தருவது என பல நலத்திட்ட உதவிகளையும் செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்.

அஜித் தனது ரசிகர் மன்றத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு களைத்து விட்டாலும் ரசிகர்கள் அவருடைய ஒவ்வொரு செயலையும் கொண்டாடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. தங்கள் கொண்டாட்டம் அஜித்தின் பார்வைக்கு பட வேண்டும் என்பதற்காகவே தாங்கள் செய்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் நேற்று முழுவதும் ட்விட்டரில் #AadvikAjith ##AadvikAjithKumar ஆகிய பெயர்களில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி பட்டியலிட்டிருந்தார்கள்.

ஆனால் வழக்கம் போல இதை எதையும் கண்டுகொள்ளாத அஜித் தனது மகனின் முதலாமாண்டு பிறந்தநாளை நேற்று தனது குடும்பத்தினருடன் தனிமையில் கொண்டாடி மகிழ்ந்தார்.